2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண் குழந்தையை பெற்றதால் மனைவியை உதைத்து கொன்ற கணவன்

Super User   / 2012 ஜூலை 26 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவி இரண்டாவது தடவையாக பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை உதைத்து கொன்ற சம்பவம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இடம்பெற்றுள்ளதாக தமிழக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

மேற்படி பெண் உதைக்கப்பட்டதால் நேற்றிரவு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை உயிரிழந்தாகவும் பொலிஸார் கூறினர்.

அப்பெண்ணின் கணவரான பாண்டியராஜன் எனும் 25 வயதான நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 தனது மனைவி இரண்டாவது தடவையாகவும் பெண் குழந்தையை பெற்றதால் அவர் ஆத்திரமடைந்திருந்தார் எனவும்  வாக்குவாதமொன்றையடுத்து மனைவியை அவர் உதைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இக்கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அந்நபரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0

  • riyas Friday, 27 July 2012 02:35 AM

    பெண் குழந்தை பெற காரணமான மரபணு ஆணில் இருந்துதான் கடத்தப்படுகிறது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .