2025 மே 14, புதன்கிழமை

ஏழு மாத குழந்தைக்கு மூச்சுதிணறலை ஏற்படுத்திய பெண் கைது

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழு மாத குழந்தையை பல முறை மூச்சுத் திணற செய்து கொடுமை படுத்திய குற்றத்திற்காக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த பணிப்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டீரிஸா மாக்னா என்றழைக்கப்படும் 48 வயதுடைய இப்பெண், குழந்தையை கொடுமை படுத்தும் வீடியோ காட்சிகளானது குழந்தையின் பெற்றோரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்குழந்தையானது கடந்த ஜனவரி மாதம் பிறந்துள்ளது. இக்குழந்தையானது உற்சாகமின்றியும் வித்தியாசமான செயற்பாட்டையும் வெளிப்படுத்துவதை அவதானித்த பெற்றோர் தமது குழந்தைக்கு ஏதோ விபரீதம் நடந்திருப்பதாக உணர்ந்துள்ளனர்.

பின்னர் தாம் வீட்டில் இல்லாத நேரம் தமது பிள்ளைக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்காக வீட்டில் இரகசிய கண்காணிபபு கமரா ஒன்றை பொருத்தினர்.

மேற்படி பணிப்பெண், குழந்தையை தலையை பிடித்து பொம்மையை போல தூக்கி எறிவது மற்றும் அக்குழந்தையின் மூக்கு மற்றும் வாயை அடைப்பதனூடாக அக்குழந்தையை மூச்சு திணற செய்வது, அழுத்தத்தை பிரயோகிப்பது போன்ற காட்சிகள் கமெராவில் பதிவாகி இருப்பதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோர் உடனடியாக மேக்னாவை பணிநீக்கம் செய்ததுடன் இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

பணிப்பெண்ணின் இத்தகைய செயற்பாடு காரணமாக இக்குழந்தையானது மூச்சு திணறல் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன் குழந்தையின் கழுத்து பகுதியில் காயமேற்பட்டுள்ளதாக டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் சுகாதார நிலையத்தின் குழந்தைகள்துறை  பேராசிரியர் டாக்டர் சீலா லெயோடி தெரிவித்துள்ளார்.

மெக்னாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்  சுமத்தப்பட்டுள்ளதுடன் 10,000 அமெரிக்க டொலர் பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X