2025 மே 14, புதன்கிழமை

பாலியல் நோய் பரவலால் ஆபாச படப்பிடிப்புகள் இடைநிறுத்தம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில், ஆபாச படங்களில் தோன்றும் நடிகர்  நடிகையர்களுக்கு சிபிலிஸ் எனும் பாலியல் நோய் பரவக்கூடியதற்கான வாய்புகள் இருப்பதால் அமெரிக்கா முழுவதிலுமான பாலியல் படப்பிடிப்பு நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்துமாறும் இத்தகைய நடிகர்கள், நடிகையர்களை மருத்துவ  பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்க பாலியல் பட வர்த்தகக் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, லொஸ் ஏஞ்சல்ஸ் நகர பொது சுகாதார பரிசோதகர்கள் இந்நோய் பரவுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நடிகருக்கு சிபிலிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை அவரின் பாலியல் துணைகளாக நடிப்பவர்களுக்கும் இப்பாலியல் நோய் இருக்கின்றதா என்பது தொடர்பில் அவதானிக்கப்படுவதாக பேச்சு சுதந்திர கூட்டமைப்பு எனும் அமைப்பின் பெண் பேச்சாளர் ஜொவான்னே கெச்பெரோ தெரிவித்துள்ளார்.

அவர்கள் இன்னும் 10 நாட்களில் படபிடிப்புகளுக்கு திரும்பிவிடலாமென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நோயினால் தாக்கத்திற்குள்ளான ஐந்து பேரை கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் நகர பொது சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்படி அமைப்பானது இத்தொழிலில் ஈடுபடும் அனைவரையும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அழைத்துள்ளது. 1000 இற்கும் மேற்பட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ஏனெனில் இந்நோயை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் எனவும் இதனால், இந்நோயக்கான தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு படப்பிடிப்பில் ஈடுபடுமாறு பாலியல் பட கலைஞர்கள் மேற்படி அமைப்பின் மருத்துவ நிபுணர்களால் கோரப்பட்டுள்னர்.

You May Also Like

  Comments - 0

  • ikman Thursday, 23 August 2012 06:49 AM

    "இந்நோயக்கான தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு படப்பிடிப்பில் ஈடுபடுமாறு பாலியல் பட கலைஞர்கள் மேற்படி அமைப்பின் மருத்துவ நிபுணர்களால் கோரப்பட்டுள்னர்". நல்லா இருக்கையா இந்த சமூகம். இந்த நடிகர்களும்தான் இந்த மருத்துவ நிபுனர்களும்தான் மற்றும் இதற்கு ஆதரவு கட்டும் அந்நாட்டு மக்களும் இவர்கள்தான் உலகிலே கேடுகெட்ட சமூகத்தினர்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.

    Reply : 0       0

    IBNU ABOO Tuesday, 28 August 2012 01:48 PM

    அங்குமட்டுமல்ல உலகின் எல்லா நாடுகளிலும் இந்த நீலப்பட தழில் மிக ஜோராக நடைபெறுகிறது. ஜப்பானில் சென்ற வருடம் ஒரு பிரபல நடிகை எய்ட்ஸ் சுக்காலாகி மண்டைய போட்டார். உணர்ச்சிபூர்வமாக நடித்து உச்சதுக்கே கொண்டுசெல்வாராம் என்று இங்குள்ள பட விமர்சகர்களும் ரசிகர்கலும் வருந்தினார்கள் பாவம் நம்ம ஹிந்தி இதமில் சினிமாவும் இப்போ அந்தப்பட லெவலுக்குதானே வந்திருக்கு. கொஞ்சம் உடம்பில சீலை தெரியுது அவ்வளவுதான்.

    Reply : 0       0

    riyaaf Tuesday, 02 October 2012 04:22 PM

    இப்படி இருந்தா எல்லாமே வரதான் செய்யும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X