2025 மே 14, புதன்கிழமை

தன்னைக் கடித்த பாம்பை துரத்தி பிடித்து பல்லால் கடித்து கொன்ற விவசாயி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


விவசாயி ஒருவர் தன்னைக் கடித்த நல்ல பாம்பை விரட்டி பிடித்து கடித்து கொன்ற சம்பவமொன்று நேபாளத்தில் இடம்பெற்றுள்ளது.

நேபாளம், பர்தங்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது சல்மோ மியா (வயது 55) என்ற விவசாயியே இவ்வாறு பாம்பை பல்லால் கடித்து கொன்றுள்ளார்.

இவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது நல்ல பாம்பு ஒன்று இவரை தீண்டியுள்ளது. ஆத்திரமடைந்த இவர் அந்த நல்ல பாம்பை துரத்திச் சென்று பிடித்ததுடன் பாம்பு சாகும் வரை அதனை கடித்துள்ளார்.

பின் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். 

'நம்மைக் கடித்த பாம்பை அது சாகும்வரை கடித்தால் நமக்கு ஒன்றும் நடக்காது என்று ஒரு பாம்பாட்டி என்னிடம் கூறியிருந்தார். அந்த நல்ல பாம்பு என்னைக் கடித்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. அதை பழிவாங்கவே எனது பல்லால் கடித்துக் கொன்றேன்' எனறு விவசாயி கூறியுள்ளார்.

நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20,000 பேர் பாம்பு கடித்து இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Friday, 24 August 2012 04:20 PM

    அப்போ பாம்பென்றால் படைதான் நடுங்கும். விவசாயி நடுங்கமாட்டான். இனி விவசாயி என்றால் பாம்பு நடுங்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X