2025 மே 14, புதன்கிழமை

அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிக்குமாறு ஆண்களிடம் தாய்வான் அமைச்சர் கோரிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழிவறைகளின் தூய்மைகளை பேணும் வகையில் ஆண்கள் அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டுமென தாய்வானைச் சேர்ந்த ஆண்களுக்கு அந்நாட்டு சுற்றாடல்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தான் இவ்வாறான பழக்கத்தை வழக்கமாகிக் கொண்டுள்ளதாக அமைச்சர் ஸ்ரீபன் ஷென் தெரிவித்துள்ளார். இவ்வாறான பழக்கவழக்கங்களை ஆண்கள் பின்பற்றுவதனூடாக கழிவறையை ஏனைய நபர்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததாக பேணலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆண்களுக்கான பொதுக்கழிவறைகளில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்களின்படி இந்த ஆலோசனையை பின்பற்றுவது கடினமானதாக இருக்கும்  என தாய்வான் சுற்றாடல் அதிகார சபையின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால், முதலில் இதை வீட்டில் முயன்று பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த யோசனை குறித்து இணையத்தள கருத்துக் களங்களில் சார்பான மற்றும் எதிரான விமர்சனங்கள் குவிந்த வண்ணமுள்ளன.

இது சிறந்ததொரு திட்டம் என சிலர் கூறியுள்ளனர். ஆனால் வேறு சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

'இவர் மூளை கோளாறு உடைய அரசியல்வாதி. இவர் ஏன் பாவாடை அணியவில்லை?' என ஒருவர் இத்திட்டம் தொடர்பில் விமர்சித்துள்ளார்.

'அமைச்சர் ஸ்டீபன் சென்னும்  தாய்வான் ஜனாதிபதி மா யிங் ஜியோவு அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிப்பதை தொலைக்காட்சியினூடக பார்க்க விரும்புகிறேன்' என மற்றொருவர் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Tuesday, 28 August 2012 03:30 PM

    குந்தி இருந்தே சிறுநீர் கழிக்கவேண்டும் என்பது இஸ்லாமிய விதி. அதனால்தான் முஸ்லிம்கள் அப்படி அமர்ந்து சிறுநீர் கழிக்கிறார்கள்.இது ஒரு சுகாதார முறை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X