2025 மே 14, புதன்கிழமை

உறக்கத்தில் நடந்துசென்று ஆற்றில் நீந்திய பெண்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறக்கத்தில் நடக்கும் பழக்கமுடைய அமெரிக்க பெண்ணொருவர் அதிகாலை வேளையில் உறக்கத்தில் நடந்து சென்று ஆற்றில் நீந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இதாஹோ மாநிலத்தின் பேர்லி நகரை சேர்ந்த 31 வயதுடைய இப் பெண், உறக்கத்தில் நடந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த பெண் வீட்டிலிருந்து செல்லும்போது  பாதணிகள் அணியாமல் இரவு நேர ஆடையான பிஜாமாவை மட்டும் அணிந்திருந்ததாகவும் வீட்டின் ஒரு கதவு மட்டும் திறந்து கிடந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேடுதலின்போது, மேற்படி பெண் தனது வீட்டின் கால் மைல் தூரத்திலுள்ள ஆறு ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இப்பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ஆனால்  அவரது உடல் நீரில் நனைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பெண்ணின பெயரை பொலிஸார் வெளியிடவில்லை. எனினும், அவர் உறக்கத்தல் நடக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர் என தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • ibrahim samsudeen Friday, 31 August 2012 02:28 PM

    இந்த காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X