2025 மே 14, புதன்கிழமை

பாம்புகளுடன் விளையாடும் பாலகன்

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 வயதான சிறுவனொருவன் வனவிலங்கு சரணாலயமொன்றில் பாம்புகள் உட்பட ஆபத்தான விலங்குகளை அச்சமின்றி கையாள்வதன் மூலம் பலரை வியப்புக்குள்ளாக்குகிறான்.

சார்லி பார்க்கர் எனும் சிறுவன் வனவிலங்கு சரணாலயத்தில் பணியாற்றும் குடும்பமொன்றைச் சேர்ந்தவனாவான்.

விக்டோரியா மாநிலத்திலுள்ள சரணாலயமொன்றில், பல தலைமுறைகளாக சார்லியின் குடும்பத்தினர் விலங்குகளை பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு வயதான சார்லியும் மிருகங்களுடன் பழக ஆரம்பித்து இப்போது கொடிய பாம்புகளையும் அச்சமின்றி கையாள்கிறான்.

'அவனின் இயற்கையான ஆற்றலைப் பார்த்து நாம் இன்னும் வியப்படைந்துள்ளோம். அவ்விலங்குகளை கையாளும்போது அவனுக்கு எவ்வித பயமும் ஏற்படுவதில்லை. வெறுமனே அவன் விலங்குகளை கையாள்வதில்லை. இது குறித்த அறிவும் அவனுக்கு உள்ளது' என மேற்படி சரணாலயத்தின் உரிமையாளரான கிறேக் பார்க்கர் கூறியுள்ளார்.






You May Also Like

  Comments - 0

  • T.Narmathan Wednesday, 05 September 2012 09:04 AM

    பயங்கரமா இருக்கு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X