2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காதலியின் காதலை அறிவதற்காக இறந்தைப் போல் நடித்த நபர்

Super User   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது காதலி தன்னை  உண்மையாக மிக தீவிரமாக காதலிக்கிறாரா என்பதை அறிந்துக்கொள்வதற்காக நபரொருவர் கார் விபத்தில் இறந்ததுபோன்று நடித்த சம்பவமொன்று ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யரான அலெக்ஸி பைகோவ் (வயது 30) என்ற நபரே இத்தகைய விபரீத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக விபத்து நடந்தைப் போன்ற சூழலை ஏற்படுத்துவதற்காக திரைப்பட இயக்குநர், சாகச கலைஞர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆகியோரின் சேவைகளை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் தனது காதலியான லிரினா கோல்வோவை 'கார் விபத்து' இடம்பெறும் இடத்திற்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார். இதன்மூலம் தான் இறந்துவிட்டதாக காதலியை நம்பவைக்கலாம் என அலெக்ஸி பிகோவ் எண்ணினார்.
'ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் சந்திப்பதற்கு முயன்றோம். ஆனால் நான் அங்கு சென்றபோது தாறுமாறாக கிடந்த கார்கள், அம்பியுலன்ஸ்கள், மற்றும் புகைக ஆகியன காணப்பட்டன' என கொல்கோவ் தெரிவித்தார்.

'பின்னர் அலெக்ஸி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டேன். அவர் இறந்துவிட்டதாக ஒருவர் கூறினார். என் கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கியது' என அப்பெண் மேலும் தெரிவித்தார்.

ஆனால் இறந்ததாக கூறப்பட்ட பைகோவ் திடீரென துள்ளிக் குதித்து லிரினாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
'நான் இல்லாமல் அவரின் வாழ்க்கை எவ்வளவு வெறுமையாக இருக்கும்  என்பதை அவர் உணரவைக்க முயன்றேன்' என பைகோவ் கூறினார். இத்தம்பதியினர் கடந்தவாரம் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .