2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொலைக்காட்சி நேர்காணலின்போது திடீரென தோன்றிய நிர்வாண மனிதனால் பரபரப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 08 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைக்காட்சி நேர்காணலின்போது மரங்களுக்கு மத்தியிலிருந்து திடீரென நிர்வாணக் கோலத்தில் நபரொருவர் வெளியேறி வந்ததால் அந்நேர்காணலுக்கு இடையூறு ஏற்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஆர்க்னாஸ் பகுதியில் ஈவா ஹால்பெயன் (வயது 83), ஜோன் மான்செல்  ஆகிய இரு தம்பதியின் வீட்டின் கூரையில் மரம் வீழ்ந்து வீடு சேதமாகியமை தொடர்பாக அவர்களுடன் தொலைக்காட்சி நிறுவனமொன்று நேர்காணலொன்றை நடத்திக் கொண்டிருந்தது.

அவ்வேளையில் மரங்களுக்கிடையிலிருந்து நிர்வாண மனிதரொருவர் வெளியே வந்துள்ளார்.

அங்கே தோன்றுவது என்ன என மான்செல் ஆச்சரியமாக கேட்டுள்ளார். அதன்போது மேற்படி நபர் சாதாரணமாக அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்துள்ளார். அதன்பின் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். விசாரணைகளின்போது மேற்படி நபருக்கு 22 வயதென்றும் கடும் போதையிலிருந்த அவர், நிர்வாணமக மரங்களுக்கு இடையிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது இடத்தில் போதையுடன் காணப்பட்டமை மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்டமை முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .