2025 மே 14, புதன்கிழமை

வன்முறைகளை தூண்டும் வார்த்தைகளை பறவைக்கு கற்றுக்கொடுத்த பெண் நெருக்கடியில்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 11 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயலவர்களை சபிக்கும் வகையில் வன்முறையிலான வார்தைகளை தனது வளர்ப்பு பறவைக்கு கற்றுக்கொடுத்த பெண்ணொருவர் நீதிமன்றம் செல்லும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் ரோடி தீவுப் பகுதியை சேர்ந்த லியனீ டெய்லர் என்பவரே இத்தகைய சந்தர்ப்பத்தை எதிர்கொண்டுள்ளார். இவர் கிளியின பறவையான கொகாடூ பறவையை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றார்.

அதனை 'வில்லி' என்ற பெயர் கொண்டு செல்லமாக அழைக்கும் இவர், அதற்கு உள்ளூர் விலங்கு சத்த விதிமுறைகளை மீறி, வன்முறையை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்களை கற்றுக்கொடுத்துள்ளார்.

இப்பறவையின் சபித்தல் செயற்பாட்டால் பலமுறை பாதிப்படைந்த இரு பெண்கள் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதால் மேற்படி பெண் நீதிமன்றில் ஆஜராகும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.

கதலீன் மெல்கர் மற்றும் கிரெய்க் பொன்டெய்னி என்ற இருப்பெண்களும் மேற்படி கிளியின் வசைச் சொற்களை பலமுறை கேட்கும் சந்தரப்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேற்படி பறவை தன்னை பரத்தையர் என்று தினமும் அழைப்பதாக மெல்கர் தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் விலங்குகள் சத்தம் தொடர்பிலான விதிமுறைகள் தெளிவில்லாத காரணத்தினால் இவ்வழக்கை தள்ளுப்படி செய்யுமாறு டெய்லரின் வழக்குரைஞர் விண்ணப்பித்தப்போதும் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்டதுடன் இவ்வழக்குத் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X