2025 மே 14, புதன்கிழமை

சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டபின், தான் வல்லுறவுக்குள்ளானதாக கூறிய பெண்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் இருவருடன் பாலியல் உறவுகொண்ட பின்னர், அம்மாணவர்கள் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்திய பெண்ணொருவர் நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

பிரிட்டனின், சர்ரே டெட்வேர்த் பகுதியை சேர்ந்த கெலி பெக்கர் என்ற 34 வயதான பெண்ணே இவ்வாறு 14 வயது மற்றும் 16 வயதுடைய மாணவர்களுடன் பாலியல் உறவுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நடத்தையில் ஈடுபட்ட மேற்படி பெண், பின்னர்  மேற்படி மாணவர்கள் தன்னை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகவும் இம்மாணவர்களின்; நண்பர்கள் தனது வீட்டை உடைத்து கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் என்பவற்றை திருடியதுடன் தனது பிள்ளைகளுக்காக வைத்திருந்த ஈஸ்டர் முட்டைகளையும் உண்டுவிட்டு சென்றதாக அப்பெண் முறைப்பாடு செய்தார்.

எனினும், சந்தேகம் கொண்ட விசாரணை அதிகாரிகள் அப்பெண்ணை நம்புவதற்கு மேற்படி மாணவர்களை நம்பினர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையின்பின் சிறுவனொருவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அப்பெண் மீது வழக்கு தொடரப்பட்டது.

குறித்த மாணவர்கள் இருவரும் மேற்படி பெண்ணுடன் பாலியல் நடத்தையில் ஈடுபட்ட வேளை அம்மாணவர்களின் நண்பர்கள் அவ்வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தின்போது மேற்படி பெண்ணின் இரண்டு வயது மகன் அதே கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

விருந்துபசாரம் நடைபெறுவதற்கு முன்பாக அப்பெண் 3 போத்தல் வைன் அருந்தியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

அப்பெண் குற்றவாளியாக காணப்பட்டபோதிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை. ஆனால் மூன்றுவருடகாலம் சமூக சேவையில் ஈடுபட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X