2025 மே 14, புதன்கிழமை

கால்பந்து போட்டியின்போது நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்று கால்பந்தாட்ட போட்டியொன்று, மைதானத்தில் நிர்வாணக்கோலத்தில் ஓடிய நபரொருவரினால் தடங்கலுக்குள்ளானது.

ஸ்பைடர் மேன் பாணியில சிவப்பு நிறத்திலான முகமூடியை அந்நபர்  அணிந்திருந்தார். அது தவிர வேறு எந்த எதையும் அவர் அணிந்திருக்கவில்லை.

இவ்வாறான சம்பவம் நடைபெறுவது இது முதல் தடவையல்ல. எனினும், இந்நபர் மைதானத்தில் நிர்வாணமாக ஓடித்திரிந்தபின், பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிடிபடாமல் வேலியை கடந்து ஓடினார். அதன்பின் அங்கு வந்த காரொன்றில் அவர் பாய்ந்து ஏறி தப்பிச் சென்றார்.

இதனால் அவரின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டறிய முடியவில்லை. நன்கு திட்டமிட்ட ரீதியில் இச்சம்பவம் நடைபெற்றமை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X