2025 மே 14, புதன்கிழமை

பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி சமைத்து உண்ட பொலிஸ் அதிகாரி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை கொலை செய்து கண்டதுண்டமாக வெட்டி சமைத்து உண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சுமார் 100 பெண்களை கடத்தி பாலியல்வல்லுறவுக்குபட்டுத்தி கொலை செய்து, பின்னர் அவர்களை சமைத்து உண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நியூயோர்க் நகரில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கில்பர்ட் வாலே என்ற 29 வயதுடைய நபரே இத்தகைய கொடூர செயல்களை புரிந்துள்ளார்.

குறித்த நபர் நர மாமிசம் உண்பதாக சந்தேகம் அடைந்த அவரது  மனைவி கெதலின் பொலிஸாருக்க வழங்கிய தகவலை அடுத்தே அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  அத்துடன் அவரிடமிருந்த கணினியையும் பறிமுதல் செய்தனர்.

அந்த கணினியை சோதனைசெய்தபோது, அதில் குறைந்தப்பட்சம் 100 பெண்களின் பெயர் விபரங்கள், புகைப்படங்கள், விலாசம் மற்றும் அப் பெண்களின் உடல் ரீதியான தகவல்கள் என்பவை சேமிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபர் இந்த தகவலினூடாக மேற்படி பெண்கள் தொழில் புரியும் இடங்கள் மற்றும் அவர்களது இல்லங்கள் குறித்து தொடர்ந்து அவதானித்து வந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது இவ்வாறான சம்பவமானது ஆழ்ந்த கவலையளிக்கின்றது என்றும் 16 வருட நீதித்துறை அனுபவத்தில் இவ்வாறான வழக்கை நான் எதிர்கொள்ளவில்லை என்றும் நீதவான் ஹென்ரி பிட்மன் தெரிவித்துள்ளார்.

இந்நபர் மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானது. நவீன உலகில் இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுக்களை கவனத்திற்கொள்ள வேண்டியதில்லை என இந்நபருக்காக வாதாடும் வழக்குரைஞர் தெரிவித்தார்.

இவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது. 

You May Also Like

  Comments - 0

  • Guest Thursday, 01 November 2012 06:21 AM

    he is not killed anyone but he plan for this matter.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X