2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாணவர்களைக்கொண்டு சக மாணவர்களை தண்டித்த ஆசிரியர் நெருக்கடியில்

Kogilavani   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வகுப்பு மாணவர்களைக்கொண்டு சக மாணவர்களை தண்டித்த ஆசிரியை ஒருவர் சிறைத் தண்டனையை எதிர்கொண்ட சம்பவமொன்று போலந்தில் இடம்பெற்றுள்ளது.

மரியா டின்டெஸ்கி என்ற கணித பாட ஆசிரியையே இத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

இவர் 10 வயது மாணவர்களை தூண்டிவிட்டு அம்மாணவர்களினூடாக சக மாணவர்களை தண்டித்துள்ளார்.

10 வயது மாணவி ஒருவர் தனது கொம்பாஸ் பெட்டியை மறந்து வந்ததற்காக குறித்த அசிரியை மாணவியை மேசைக்கு கீழே குனிய செய்து அம்மாணவியை தாக்குமாறு சக மாணவர்களுக்கு பணித்துள்ளார்.

மேலும் வீட்டுப் பாடங்கள் செய்து வராத மாணவர்கள், மற்றும் பாடங்களில் பிழைகள் விட்ட அறையுமாறும் ஏனைய மாணவர்களுக்கு பணித்துள்ளார்.

இதனால் பல மாணவர்கள் உளநலம் பாதிப்படைந்துள்ளனர்.

ஆசிரியரின் இத்தகைய செயற்பாடுக் காரணமாக அவர் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் 5 வருட சிறைத்தண்டனையையும் எதிர்கொண்டுள்ளார்.

இதேவேளை இச்சம்பவங்களால் பாதிப்படைந்த மாணவர்கள் மனநல வைத்தியரின் உதவியை நாடியுள்ளனதாக குறித்த பாடசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .