2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சீனாவில், பெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோர்களை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டமொன்றை சீன அரசு ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பிள்ளைகளால் பராமறிக்கப்படாமால் தனிக்கப்படும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இங்கு 60 வயதுக்கு மேலான முதியவர்கள் 16 கோடியே 70 இலட்சம் பேரும் 80 வயதுக்கு மேல் 10 இலட்சம் பேரும் உள்ளதாக  தெரிவிக்கிகப்படுகின்றது.

கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோருக்கு ஒரு குழந்தை சட்டம் சீனாவில் அமுலில் உள்ளது.  இதனால், ஒரு பிள்ளை மட்டுமே கொண்ட குடும்பங்களில் அப்பிள்ளை வளர்ந்து தம் இருப்பிடம்விட்டு வேறு இடங்களுக்கு செல்வதால் பெற்றோர் கவனிக்கப்படாமல் விடப்படும் நிலை அதிகரித்துள்ளது.

இவர்கள் தங்களின் இறுதிகாலத்தில் ஆதரவின்றி அனாதைகளாக மரணம் அடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமை, சீனர்களின் கலாசாரத்துக்கு எதிரானதாக கருதப்படுகிறது.

எனவே, எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் பிளளைகள் தங்கள் பெற்றோரைக் கட்டாயம் நேரில் சென்று சந்திக்க வேண்டும், அவர்களை வாழ்நாள் முழுவதும் தம்முடன் வைத்து காப்பாற்ற வேண்டும் போன்ற விதிகளுடன் சீன அரசு இந்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சட்டத்தின்படி, பெற்றோரைக் கவனிக்காமல் தனியாக விடும் பிள்ளைகள் மீது வழக்கு தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை வழங்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

You May Also Like

  Comments - 0

  • kalai Sunday, 30 December 2012 05:06 PM

    இலங்கை இதுதான் நல்ல பாடம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X