2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'அழகு யானை' போட்டி

Kogilavani   / 2013 ஜனவரி 03 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


அழகு ராணி போட்டிகள், கட்டழகர்களுக்கான போட்டிகளை நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேபாளில் யானைகளுக்கான அழகு யானை போட்டியொன்று இடம்பெற்றுள்ளது.

வருடாந்தோறும் நேபாள், சிட்வான் தேசிய பூங்காவில் யானைகளுக்கான விழாவொன்று இடம்பெறுகிறது. இந்நிகழ்வில் இம்முறை அழகு யானை போட்டி நடத்தப்பட்டுள்ளது.

9 யானைகள் தமது பாகன்களுடன் போட்டியில் கலந்துகொண்டுள்ளன.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் யானைகளின் தலை உட்பட உடல் சிறப்பாக அலங்கரிக்கபட்டிருக்க வேண்டும். அத்துடன் யானைகளின் கால் விரல் நகங்கள் சிறப்பாக வர்ணமிடப்பட்டிருக்க வேண்டும் என போட்டி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், முதல் மூன்று யானைகளை தெரிவு செய்வதற்காக 5 நடுவர்கள் களத்தில் இறக்கப்பட்டனர்.

இப்போட்டியில் கலந்துகொண்டிருந்த 9 யானைகளில் 'சித்வார் காலி' என்ற யானையே இவ்வருடத்துக்கான நேபாள அழகு யானையாக தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

' சித்வான் காலி மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது' என யானை முகாமைத்துவ குழுவின் தலைவர் ஸ்ரீராம் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் யானைகள் தமது பாகன்களின்  கட்டளைப்படி இயங்கவேண்டும் என்பது கட்டாயமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் மற்றுமொரு அம்சமாக யானைகளுக்கான கால்பந்தாட்ட போட்டியும் நடத்தப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .