2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாயின் மருத்துவ செலவுகளுக்காக கன்னித்தன்மையை விற்கும் யுவதி

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது தாயின் மருத்துவ செலவுகளுக்காக பிரேசிலைச் சேர்ந்த யுவதி ஒருவர் கன்னித்தன்மையை விற்பதற்கு முன்வந்துள்ளார். இது தொடர்பிலான விளம்பரமொன்றையும் அவர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரெபேக்கா பேனார்டோ என்ற 18 யுவதியே இவ்வாறு தனது கன்னித்தன்மையை விற்பதற்கு முன்வந்துள்ளார்.

அண்மையில், பிரேசிலை சேர்ந்த மற்றுமொரு பெண்ணான கட்ரினா மிகிலியோரினி வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஜப்பான் பிரஜைக்கு தனது கன்னித்தன்மையை 500,000 ஸ்ரேலிங் பவுனுக்கு விற்றிருந்தார்.

மேற்படி மிகிலியாரின் செயற்பாட்டை ரெபேக்கா பின்தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கன்னித்தன்மையை விற்பதனூடாக கிடைக்கும் பணமானது தனது தாயின் மருத்துவ செலவுகளுக்கு போதுமானாதாக அமையும் என ரெபேக்கா நம்பிக்கை கொண்டுள்ளார்.

மேற்படி பெண்ணின் இத்தீர்மானமானது அவரது தாய்க்கு மகிழ்வை ஏற்படுத்துவதாக அமையவில்லை.  அவரது தாய்  அண்மையில் பக்கவாத
நோயினால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

'எனது மகள் தொழில்புரிய வேண்டும்.  அதைவிடுத்து விபசாரியாக இருக்கக் கூடாது' என அப்பெண்ணின் தாய் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ரெபேக்கா யூடியுப் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தை 50,000 பேர் வரை பார்த்துள்ளனர். இதனால் விளம்பரத்திற்கான பலன் வெகுவிரைவில் கிட்டிவிடும் என அவர் நம்பிக்கைகொண்டுள்ளார்.


தொர்புடைய செய்தி....

வறியவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்காக கன்னித்தன்மையை ஏலமிட்ட மாணவி

ஜப்பானியருக்கு கன்னித்தன்மையை விற்பதற்கு முன்வந்த பெண் நெருக்கடியில்

  Comments - 0

  • ikmsm Wednesday, 09 January 2013 04:00 AM

    இந்த அருவருக்கத்தக்கது எல்லாம் ஒரு செய்தியா? இந்த கேடுகெட்டவர்களுக்கு முதலிடம் கொடுத்து வெளியிடுவதா?

    Reply : 0       0

    Niro Sunday, 03 February 2013 04:01 PM

    இதெல்லலாம் ஒரு பொலப்பா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .