2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆழ்கடலில் சுறாவுடன் இணைந்து மொடல் அழகிகள் சாகசம்

Kogilavani   / 2013 ஜனவரி 10 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


மொடல் அழகிகள் இருவர்  ஆழ்கடலில் சுறாவுடன் நின்று புகைப்படங்களுக்கு போஸ்கொடுத்துள்ள காட்சியானது பலரை வியப்படைய செய்துள்ளது.

இவர்கள் மிகப்பெரிய சுறா ஒன்றை சுற்றி சுற்றி நீந்திய நிலையில் இவ்வாறு போஸ் கொடுத்துள்ளனர்.

கடலில் மீன் வேட்டை தொடர்பிலான விழிப்புணர்வுக்காக இவர்கள்  இப் புகைப்படங்களை எடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

பிலிபைன்ஸைச் சேர்ந்த ஹன்னா பாசர், ரொபேர்டா மென்சினோ ஆகியோரே இவ்வாறு புகைப்படங்களுக்கு காட்சியளித்துள்ளனர்.

மேற்படி இருவரும் கடலின் ஆழம்கூடிய பகுதிக்கு சென்று சுமார் 30 அடி நீளமான சுறாவைச் சுற்றி நீந்தியுள்ளனர்.

புகைப்படக் கலைஞரான கிறிஸ்டினா ச்மிட் என்பவர் இவர்களை புகைப்படம் பிடித்துள்ளார். இது நான்கு மாத திட்டமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .