2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தேங்காயினுள் குருவி உருவம்: அட்டாளைச்சேனையில் அதிசயம்

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட், ஏ.ஜே.எம்.ஹனீபா


அட்டாளைச்சேனையிலுள்ள குடியிருப்பு வளவொன்றிலுள்ள தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காயை உரித்த போது – அதனுள் குருவியை ஒத்த உருவமொன்று காணப்பட்டமையானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது.

அட்டாளைச்சேனை 9 ஆம் பிரிவிலுள்ள றிஸ்வி என்பவரின் வீட்டு வளவில் நின்றிருந்த தென்னை மரத்திலிருந்து, பழுத்து விழுந்த தேங்காய் மட்டைகளை உரித்த போது, உள்ளேயிருந்த தேங்காயிலிருந்து முளை விட்டிருந்தது. அந்த முளைதான் குருவி உருவத்தில் காணப்பட்டது.

சில காலங்களுக்கு முன்னர், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள குடியிருப்பு வளவினுள் இருந்த மரத்தில் இருந்து கிடைத்த தேங்காயொன்றினுள் - மனித கரத்தினை ஒத்த உருவத்தில் முளை காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X