2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆங்கிலம், உருது, அராபி மொழிகளை பேசும் கிளி

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரிட்டனில், கிளியொன்று ஆங்கிலம், உருது, அராபி ஆகிய மொழிகளை பேசி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இஷான் மஹமூத் என்பவர் வளர்த்து வந்த 'ரொகேட்' என்று அழைக்கப்படும் ஆண் கிளியே இவ்வாறு பல மொழிகளை பேசும் திறமைமிக்க பறவையாக இருந்து வருகின்றது.

இக் கிளியானது 'ஹலோ, அவ் ஆர் யூ', 'ஆர்க் யான்'  'தே ஆர் இயர்' போன்ற வார்த்தைகளை பேசுவதாக அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

'ரொகேர்ட் எப்போதும் வரவேற்பரையில்தான் இருக்கும். எப்போதும் எம்மை சுற்றியே காணப்படும். அதனால், அது வெவ்வேறான மொழிகளை கற்றுகொண்டது. அது அதிகமான வார்த்தைகளை கற்றுகொண்டது' என இது தொடர்பில் அக் கிளியின் உரிமையாளரான இஷான் மஹமூட் தெரிவித்துள்ளார்.

உருது மற்றும் ஆங்கில மொழிகளை அதற்கு கற்றுகொடுக்க நாங்கள் முயற்சிக்கின்றோம். அவ்வாறு கற்றுகொடுத்தால் அதனை எமது நிறுவனத்திற்கும் அழைத்து செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஷானுடைய தந்தை டாரிக் இந்த கிளியை பாகிஸ்தானில் வளர்த்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே அதனை பிரிட்டனுக்க அழைத்து வநதுள்ளார்;.

'ஹலோ' , 'ஆர் யூ ஓல்ரைட்', 'பாய்'  ஆகிய ஆங்கில வார்த்தைகளையே ரொகேட் முதலில் பேசியுள்ளது. இதேவேளை, வீட்டில் உள்ள நாய், பூனையை போன்றும் இந்த ரொகேட் பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X