2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தனிமையை போக்கும் தங்க மீன்கள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் உள்ள ஹோட்டலொன்று வாடிக்கையாளர்களின் தனிமையை போக்குவதற்காக புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமது ஹோட்டல் அறைகளில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க மீன்கள் உள்ள தொட்டியொன்றை இவ் ஹோட்டல் வாடகைக்கு வழங்கி வருகிறது.

தனிமையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தமது தனிமையை போக்கிகொள்ள இந்த மீன்களை பயன்படுத்திகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளியில் சென்று திரும்பி வரும் வாடிக்iயாளர்களின் தனிமையை போக்குவதற்கும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் இந்த மீன்கள் உதவுவதாக ஹோட்டல்; முகாமையாளர் ஜெப்ரைலி தெரிவித்தார்.

இந்த விநோத செயற்பாடுகளானது தமது ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்களின் வரவை அதிகரித்துள்ளது. இதேவேளை, வாடிக்கையாளர்கள் ஒருமுறை வாடகைக்கு எடுக்கும் மீனையே மீண்டும் வாடகைக்கு எடுக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X