2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஓரினத் திருமணங்களை அங்கீகரித்து பிரான்ஸில் புதிய சட்டம்

Menaka Mookandi   / 2013 மே 19 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓரினத் திருமணங்களையும் ஓரின ஜோடிகள் குழந்தை தத்தெடுத்துக்கொள்வதையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமொன்று பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான சட்டமூலத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் கைச்சாத்திட்டுள்ளார். இந்நிலையில், ஓரினத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய உலக நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் 14ஆவது இடத்தைப் பிடிக்கின்றது.

மேற்படி சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரான்ஸில் பல மாதங்களாகவே காரசாரமான அரசியல் விவாதங்கள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், இச்சட்டத்தை எதிர்த்து முறைப்பாடு செய்திருந்தவர்களின் கோரிக்கையை பிரான்ஸின் அரசியல் சாசன நீதிமன்றம் நிராகரித்திருந்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஓரின ஜோடிகள் திருமணம் செய்வதற்காக காத்திருக்கிறார்கள் என ஓரினச் சேர்க்கையாளர் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் எதிர்வரும் ஜூன் மாத மையப்பகுதியில்தான் பிரான்சில் ஒருபால் உறவுக்கார திருமணங்கள் நடைபெற ஆரம்பிக்கும் எனத் தெரிவதாக பாரிஸில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இதற்கான உத்தியோகபூர்வ படிமங்களையும் ஆவணங்களையும் திருத்த வேண்டியுள்ளதாலேயே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இதேவேளை, இச்சட்டத்துக்கு எதிராக தமது போராட்டம் தொடரும் என அதனை எதிர்ப்பவர்கள் சூளுரைத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .