2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அதற்கு உடன்படாத ஆணுறுப்பை கடித்த காதலி

Kanagaraj   / 2013 மே 20 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் தேவையை நிராகரித்தமைக்காக பெண்ணொருவர் தனது காதலனின் ஆணுறுப்பை கடித்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அவருடைய காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

புளோரிடா, பிரெடன்டனைச் சேர்ந்த கிரிஸ்டல் ஹரிசன் என்ற 19 வயது யுவதியே இத்தகைய குற்றத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பாலியல் தேவையை நிராகரித்தமைக்காக  24 வயதுடைய தனது காதலனையே  இவ்வாறு காதலி தண்டித்ததாக உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபரின் மார்பு பகுதியிலும் பலத்த கீறல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு அதில் உடன்பாடில்லையென தனது காதலியான ஹரிசனிடம் குறித்த நபர் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், தனது ஆசையை மறுத்தமைக்காக தனது காதலனின் ஆணுறுப்பை ஹரிசன் கடித்துள்ளதுடன் அவரது மார்பு பகுதியிலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .