2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மிக வேகமான கழிப்பறை

Kogilavani   / 2013 மே 22 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகம் மிகவேகமாக ஓடிக்கொண்டிருக்கையில் அதற்கு ஈடுகொடுப்பதற்கு மனிதனும் நிமிடத்திற்கு நிமிடம் ஏதோவொன்றை செய்துகொண்டுதான் இருக்கின்றான்.

போகவேண்டிய இடத்திற்கு போய்கொண்டே இயற்கை கடன்களை முடிக்கும் வகையிலான நடமாடும் கழிப்பறையை குழாய் பொருத்துனர் ஒருவர் தயாரித்துள்ளார்.

இந்த கழிப்பறை உலகில் மிகவும் வேகமாக செயல்படும் கழிப்பறையாக இருக்கின்றது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 140 வலுகொண்ட மோட்டார்சைக்கிள் இயந்திரத்தினை கொண்டே இது தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலின் பர்ஸ் என்ற 33 வயதுடைய நபரே இதனை உருவாக்கியுள்ளார். இதற்காக அவர் மூன்று மாதங்களை செலவிட்டுள்ளார்.
மிகவும் வேகமாக செயற்படக்கூடிய இந்த நடமாடும் கழிப்பறையில் நீரும் நிறப்பப்பட்டு காணப்படுகின்றது.

நடமாடும் கழிப்பறையின் கைப்பிடியில் உள்ள பொத்தானை அழுத்தும்போது நிறப்பப்பட்டுள்ள நீர் இயல்பாகவே கழிப்பறையை சுத்தமாக்கும்.
இக் கழிப்பறை வாகனத்தில் செய்தித்தாள்களை கொழுவிக் கொள்வதற்கான வசதிகளும் காணப்படுகின்றன.

ஸ்கூட்டர் ஒன்றினை அடிப்படையாகவும் அதற்கு மேலாக பலகையிலான அடிப்பாகமும்; இதற்கு பொருத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நான்கு மின் கியர்களை கைபிடிக்கு பொருத்தியுள்ளார்.

'இதனை செலுத்துவதற்கு பயமாக இருக்கிறது. கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக  நிரப்பப்பட்டுள்ள நீரானது பாரம் நிறைந்ததாக காணப்படுகின்றது' குழாய் பொருத்துனர் தெரிவித்துள்ளார். 

'கழிப்பறை இருக்கையும் வழுக்கும் தன்மை கூடியது. ஆனால் அதில் இருப்பது கடினமானது. நான் வேகமாக இதனை செலுத்தும்போதும் வழுக்கும் தன்மையை உணர்வேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X