2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொறாமையின் உச்சக்கட்டம்: உயிரை காவுகொண்ட உறவினர்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறவினர்களின் சூழ்ச்சியால் பெண்ணொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனை சேர்ந்;த ரிஹானா பேகம் என்ற 43 வயது பெண்ணே இவ்வாறு இனந்தெரியாத குழுவொன்றினால் கத்தியால் குத்தப்பட்டும் தாக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

தனது கணவன் மற்றும் 12 வயது மகனுடன் பங்களாதேஷில் விடுமுறை தினத்தின் மாலைபொழுதொன்றை கழித்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென தோன்றிய இனந்தெரியாத குழவினர் பேகத்தினை கடுமையாக தாக்கியுள்ளதுடன் கத்தியல் குத்தியும் உள்ளனர்.

அக்குழவினர் பேகத்தின் தலை மட்டும் கைகளில் குத்தினர் என  பேகத்தின் உறவுக் கார பெண்ணான சீலா அலி என்ற பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கும்பல் பேகத்தின் மருமகள் முறையான 15 வயது சிறுமியின் வலது கையையும் காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

இக்குழுவினரை தப்பிச் செல்லுமாறு தனது சகோதரி கூறியிருக்க வேண்டும் என்று பேகம் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

பேகத்தின் வேகமான வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று பேகத்தின் உறவு கார பெண் சீலா அலி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,

பேகம் அதிகமான வருவாயை ஈட்டுபவராக காணப்பட்டார். அதனால் அவரது உறவினர்கள் பலர் பேகத்தின் மீது பொறாமை கொண்டவர்களாக காணப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

வெளிவிவகாரங்களுக்கான ஊடக பேச்சாளர், பிரிட்டன்வாசியான ரிஹானா பேகத்தின் கொலை சம்பவம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

எமது தூதரகத்தினூடாக இவரது குடும்பத்திற்கு உதவிகளை வழங்க உத்தேசித்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .