2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெற்றோருக்கு மாப்பிள்ளை தோழனான குழந்தை மரணம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவில் பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த 2 வயது குழந்தை புற்றுநோயால் நேற்று மரணம் அடைந்தது.

அமெரிக்காவைச் காதலர்களான ஷான் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ ஆகியோருக்கு மாகனாக பிறந்த சேர்ந்த லோகன் என்ற இரண்டு வயது குழந்தையே இவ்வாறு இறந்துள்ளது.

இக்குழந்தை இறக்கும் முன்பு தமது பெற்றோருக்கு மாப்பிள்ளை தோழனாக நின்ற செய்தி ஊடகங்களில் பரவலாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோகன் இரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவனுக்கு பல முறை அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அச் சிகிச்சைகள் ஒன்றும் பயனளிக்காத நிலையில் லோகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஓர் இரு வாரங்களில் உயிரிழந்துவிடுவான் என தெரிவித்துள்ளனர்.

இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் லோகனை எப்போதும் நினைவுக்கூறும் முகமாக அவனை தமது திருமண வைபவத்தில் மாப்பிள்ளை தோழனாக நிறுத்தியிருந்தனர்.


தொடர்புடைய செய்தி

மாப்பிள்ளை தோழனான இரண்டு வயது குழந்தை


  Comments - 0

  • Gowri Thursday, 08 August 2013 07:03 AM

    மிகவும் துக்கமான செய்தி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .