2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொடர்மாடிக் குடியிருப்பில் பாரிய மலைக் குன்று: உருவாக்கியவர் நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


தொடர்மாடிக் குடியிருப்பின் மேற்பகுதியில் செயற்கையாக மலையொன்றை உருவாக்கிய நபர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இவ் விசித்திர சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

26 மாடிகளைகொண்ட குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் களஞ்சியசாலையொன்றை சொந்தமாக விலைக்கு வாங்கிய விரிவுரையாளர் சாங் லின் என்பவரே இத்தகைய நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இவர் மேற்படி குடியிருப்பில் களஞ்சியசாலை போன்ற பகுதியை விலைகொடுத்து வாங்கியுள்ளார்.

காலப்போக்கில் சுவர்களின் சிதைந்த பாகங்கள், கற்கள், மணல்கள் போன்றவற்றை அடுக்குமாடியின் கூரைப் பகுதிக்கு கொண்டு சென்ற இவர், அவற்றைகொண்டு மலையொன்றை உருவாக்கியுள்ளார்.

இவ்வாறு அந்த மலையை உருவாக்குவதற்கு 6 வருடங்களை அவர் செலவிட்டுள்ளார்.

இவரது இத்தகைய செயலைக் கண்டு அதிர்ந்துபோன ஏனையவர்கள் அம்மலையை அகற்றுமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதிகளவான பருமன் காரணமாக மேற்படி தொடர்மாடிக் குடியிருப்பில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஏனைய குடியிருப்பாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதேவேளை, மேற்படி நபர் இந்த தொடர்மாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களையும் உடைத்துள்ளதால் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளநீர் வடிந்தோடுவதாகவும் நீர்தேங்கி நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

'அயலவரான இவர் இவ்வாறான மலையொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஒருவரிடமும் அனுமதியை பெறவில்லை' என மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொடர்மாடிக் குடியிருப்பின் மேற்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மலையை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



  Comments - 0

  • kuma Sunday, 25 August 2013 03:05 AM

    மாத்தியோசிப்பதில் சீனர்கள் வல்லவர்கள் என மறுபடியும் நிரூபித்துள்ளார்கள்.

    Reply : 0       0

    jacintha Saturday, 05 October 2013 09:55 AM

    நல்ல பகிடிதான்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .