2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வித்தைக்காட்டும் விழிகள்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 04 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


விழிகளை பிதுக்கி வித்தைக்காட்டும் நபரொருவரின் காட்சிகள் அடங்கிய வீடீயோ இணையத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஜான் டோயில் (30 வயது) என்பவரே இவ்வாறு விழிகளை பிதுக்கி வித்தைகளை காட்டி வருகின்றார்.

இவர் பார்வைக்கு சுமாராக விளங்கினாலும் கண்களை உருட்ட ஆரம்பித்து விட்டால் அது மிகவும் அகோரமாக விளங்குகின்றது.

இவர் தனக்கு இத்தகையதொரு திறமை இருக்கின்றது என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தந்தையான இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள மதுபானசாலை ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தபோது  தனது கண்களை உருட்ட ஆரம்பித்துள்ளார். அதனை அவரது நண்பர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர்.

நாளடைவில் இதனையே அவர் தனது திறமையின் வெளிப்பாடாக கையிலெடுத்துகொண்டுள்ளாரர்.

தனது கண் உருட்டல் விளையாட்டு உலக சாதனை என்று கூறி வரும் அவர்,  உரிய சாட்சிகளின்றி கண் உருட்டல் வித்தையை செய்வதால் அதனை கின்னஸ் உலக சாதனை நிறுவனம்  அங்கீகரிக்கவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில்; தொலைக்காட்சி நிகழ்வொன்றில் தனது அசாதாரண திறமையை காட்டிய இவர், ஜப்பானிலும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன்போது தான் சாதனை படைக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இவரது வீடியோவை இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X