2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நடுவானில் விமானி சுகயீனம்: பயணியினால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடுவானில் விமானத்தை செலுத்திகொண்டிருந்த விமானி திடீர் சுகவீனமடைய விமானம் ஓட்டிய எவ்வித அனுபவமுமின்றிய பயணி ஒருவர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பமொன்று இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் வடபகுதியில் உள்ள ஹம்பர்சைட் விமானநிலையத்தில் மேற்படி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாக பாதிப்படைந்த விமானி பின்னர் உயிரிழந்ததாக ஹம்பர்சைட் விமன நிலைய பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இவர், விமானத்தை செலுத்திகொண்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்பட்டுள்ளதுடன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், விமானம் செலுத்திய அனுபவம் துளியேனும் இல்லாத பயணியொருவர் மேற்படி விமானத்தை விமானநிலையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த  இருவரின் அறிவுறுத்தல்களுடன்  பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.

இதில், ரோய் முரே என்று அழைக்கப்படும் பயிற்றுவிப்பாளர் ஒருவர் மேற்படி பயணிக்கு உதவியுள்ளார்.

'அவர் மிகவும் நுட்பமாக விமானத்தை தரையிறக்கினார்' என ரோய் முரெ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ரோய் மூரே மேலும் தெரிவித்துள்ளதாவது,

'அந்த பயணி விமானத்தின் அமைப்பைக்கூட தெரிந்தவர் அல்லர். அத்தோடு விமானத்தின் விளக்குகள்வேறு எரியவில்லை. இருளிலேயே இவர் விமானத்தை இயக்கியுள்ளார்.

அப்பயணி இதற்கு முன்பு விமானத்தில் பயணம் செய்தவராக இருந்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால் இதற்கு முன்பு ஒருபோதும் அவர் விமானத்தை செலுத்தி இருக்க வாய்ப்புகள் இல்லை' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X