2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போலோ நடனத்துக்கு பல்கலையில் தடை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலோ நடனமானது பாலியல் தொழிலுடன் தொடர்புப்படுவதாக கூறி போலோ நடன கற்கைக்கு பல்கலைக்கழகமொன்று தடை விதித்துள்ளது.

வோல்ஸ் நாட்டில் காணப்படும் சுவேன்ஸா என்ற பல்கலைக்கழகமே இவ்வாறு போல நடனத்தை கற்கக்கூடாது என்றுக்கூறி மாணவர்களுக்கு தடைவிதித்துள்ளது.

உடற்பயிற்சிக்காக மேற்கொள்ளப்படும் போலோ நடனமானது மேற்படி பல்கலைக்கழத்தில் அதிகமான பெண்களை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது.

இதனால், வாரத்தில் இரண்டு தடவைகள் நடைபெறும் இக்கற்கை நெறிக்கான வகுப்புகளில் டஸன் கணக்கிலான பெண்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இந்த நடனமானது பாலியல் தொழிலுடன் பாரியளவிலான தொடர்பை கொண்டுள்ளதாக கூறி மேற்படி பல்கலைக்கழக தொழிற்சங்க தலைவர் இந்த வகுப்பிற்கு தடைவிதித்துள்ளார்.

'பெண்களை பாலியல் பொருளாக பார்க்கும் இக்காலக்கட்டத்தில் இதுபோன்ற உடற்பயிற்சிகளானது பாலியல் தொழிலுக்கு தூண்டுகோளாக அமைகின்றன.

இது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டுவதாகவும் ஏற்றுகொள்வதாக அமைகின்றது.

16 முதல் 24 வயதிற்கிடைப்பட்ட பெண்கள் குழுவொன்று அதிகமான வீட்டு வன்முறைகளையும் பாலியல் வன்முறைகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

இவ் வயது பெண்கள் எமது பல்கலைக்கழத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நடனம் மில்லியன் கணக்கிலான பவுண்ட்களை பெற்றுகொள்ளும் பாலியல் தொழிலுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது. மேலும் ஆபாச அணுகுமுறை சார்ந்த மன உணர்வையும் தோற்றுவிக்கின்றது' என அவர் தெரிவித்துள்ளார்.

'சுவேன்சா மாணவர்களின்; போல்நடன அiமைப்பானது அதிகாரபூர்வ தொழிற்சங்க அமைப்பாக உருவாவதற்கு அனுமதியளிக்கின்றது. ஆனால், இந்த திட்டத்தை பின்னர் அது பின்வாங்கியது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'போல் நடன கலையை பாலியல் தொழிலுடன் தொடர்புப்படுத்தி கூறியதானது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' என போல் நடன கலை அமைப்பின் தலைவர் பெத் மோரிஸ்  தெரிவித்துள்ளார்.

"நல்ல மனிதர்கள் கூட்டுசேரும் இரவு விடுதிகளில்தான் லெப் எனப்படும் இரவு களியாட்டங்கள் அரங்கேறுகின்றன. ஆனால், போல் நடனமானது உடற்பயிற்சிக்காக மட்டுமே கட்டாயமாக நிகழ்த்தப்படுகின்றது.

மேற்படி சுவேன்சா போல் நடன தலைமை அமைப்பானது போல் நடன வகுப்புகளை காண வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் அப்போதுதான் போல் நடனம் எதற்காக நடத்தப்படுகின்றது என்ற அறிதலை அவர்கள் பெற்றுகொள்வார்கள்.

உண்மையில் போலோ நடன வகுப்புகள் உடற்பயிற்சிக்காகவே நிகழ்த்தப்படுகின்றன. இவை எப்போதும் பாலியல் தொடர்புடன் தொடர்பை ஏற்படுத்தபோவதில்லை' என்று பெத் மோரிஸ் மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .