2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாதனைக்காக இரும்பிலான பாதணி அணிந்து பயிற்சி

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக சீனாவைச் சேர்ந்த நபரொருவர் இரும்பிலான  பாதணிகளை அணிந்து பயிற்சி எடுத்து வருகின்றார்.

சீனா, ஹெபெய் மாகாணம் தாங்கசன் நகரைச் சேர்ந்த சாங்க் புக்ஸிங் என்ற 51 வயது நபரே இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

12 அங்குல நீளத்தையும் 8 அங்குல அகலத்தையும்கொண்ட இந்த பாதணியானது 900 இறாத்தால் நிறையுடையது.

இத்தகைய நிறைகொண்ட பாதணிகளை அணிந்து உலக சாதனை புரிய வேண்டும் என்பது தன்னுடைய நீண்டகால இலக்கு என அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இதற்காக அவர் கடந்த 7 வருடங்களாக இரும்பிலான பாதணியை அணிந்து 20 நிமிடங்கள் தெருவில் நடக்கின்றார். ஆனால், இத்தகைய இரும்பிலான பாதணியை அணிந்துகொண்டு அவரால் 12 யார்ட்ஸ் மட்டுமே நடக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் சாங், தனக்கு ஏற்றவகையிலான பாதணியை தானே தயாரித்துகொண்டுள்ளார். முதலில் அவர் 150 இறாத்தல் நிறையுடைய பாதணியை தயாரித்து அணிந்துள்ளார்.

ஆனால், பாதணிக்கு இந்த நிறை போததாதென கருதி மேலும் பாதணியின் நிறையை அதிகரித்துகொண்டுள்ளார். அடுத்த வருடம் இன்னும் பாதணியின் நிறையை அதிகரித்கொள்ள வேண்டுமென அவர் திட்டமிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .