2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தெருநாய்க்கு வாய்த்த அதிஷ்டம்

Kogilavani   / 2013 நவம்பர் 14 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெருவில் சுற்றித்திரிந்த நாயொன்று எவரெஸ்ட் அடிவாரத்திற்கு சென்ற முதல் நாயொன்று பெறுமையை பெற்றுள்ளது.

காஷ்மீர்,  லே எனும் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித்திருந்த 11 மாதங்களே நிரம்பிய ரூபி என்றழைக்கப்படும் நாயே இவ்வாறு எவரெஸ்ட் அடிவாரத்திற்கு சென்றுள்ளது.

வீதியில் அநாதவராக சுற்றித்திருந்த இந்நாயை முன்னாள் கோப்ல் வீராங்கனையான ஜோன் லெஃப்சன் என்பவர் கண்டு, இரக்கப்பட்டு தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த நாய்க்கு ரூபி எனப் பெயரிட்ட அவர், அதனை தன்னுடன் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு கொண்டுச் சென்றுள்ளார்.

இதேவேளை, அவர் ரூபியின் எவரெஸ்ட் பயணம் குறித்த புகைப்படங்களை தனது முகத்தளப்புத்தகத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த சாதனைப் பயணத்தின் மூலம், எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் செல்லப் பட்ட முதல் நாய் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ரூபி.

'ரூபி குறித்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். சில நாட்கள் மட்டுமே உடன் வைத்திருக்கலாம் என நினைத்துத்தான் நான் ரூபியை உடன் அழைத்துச் சென்றேன், ஆனால், என்னை மேலும் பயணம் செய்ய தூண்டியதே ரூபி தான்.

ரூபியின் இச்சாதனை மூலம் தெருநாய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்' என ரூபி குறித்து லெஃப்சன் கூறியுள்ளார்.

'ரூபிக்கு பனியின் சுவை மிகவும் பிடித்துள்ளது. ரூபி பனியில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடும் தன்மை கொண்டது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லெஃப்சன் தன்னுடன் உலகம் சுற்றிய தனது முன்னாள் செல்லப்பிராணியான ஆஸ்கர் என்ற நாய்க்கு தன்னுடைய புத்தகம் ஒன்றை சமர்ப்பணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X