2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய சிறுவன் நெருக்கடியில்

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபாசப்படங்களை பார்த்து 8 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த 13 வயது  சிறுவனுக்கே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுவன் தனக்கு 9 வயதாக இருக்கும்போது 6 வயதேயான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த ஆரம்பித்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் இத்தகைய செயலுக்கு வீட்டுச்சூழலே காரணமாக அமைந்துள்ளது.

மேற்படி சிறுவன் வீட்டில் இருக்கும்போது இணையத்தளங்களில் ஆபாசப்படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளார். மணிக்கணக்கில் கணினியின் முன்பாக அமர்ந்து மிகவும் மோசமான ஆபாசப்படங்களை பார்வையிட்டு வந்துள்ளார்.

இதைனையடுத்து தான் மடிக்கணினியில் பார்த்த விடயங்களை அந்த சிறுமியிடம் பரீட்சித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளான். அதன் பின்னர் அச்சிறுமியை வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளான்.

இந்நிலையில், சிறுவன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது,   அவனிடம் குடும்ப பின்னணிக் குறித்து நீதவான் விசாரணை நடத்தியுள்ளார்.

சிறுவனின் வீட்டில் பாலியல் தொடர்பான விடயங்கள் மிகவும் மோசமாக காணப்பட்டுள்ளன. அதாவது சிறுவனின் தாயார் தனது காதலனுடன் பாலியல் உறவுக்கொள்வதை  பலமுறை நேரில் இச்சிறுவன் பார்த்துள்ளானாம்.

அவனது தாயாரும், தனது மகன் ஆபாசப்படங்கள் பார்ப்பதை பலமுறை பார்த்தும் அதனை தடுக்க எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில்,

இந்த சிறுவனுக்கு மிகவும் மோசமான அன்பு பெற்றோரின் மூலமாக கிடைத்துள்ளது.

பெற்றோர் மிகவும் பொறுப்பற்றத்தனமாக நடந்துள்ளனர். இது இந்த சிறுவனின் தவறு கிடையாது. பெற்றோர்களின் அலட்சியமே இதற்குக் காரணம். இது மிகவும் வருத்தம் தருகிறது.

மேலும் இந்த சிறுவனை, இவனது தாயாரின் காதலரும் பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட செயல்களைப் பார்த்துத்தான் இந்த சிறுவன் தவறான வழிக்குப் போயுள்ளான்.

சிறுவனின் வீட்டில் பாலியல் விடயங்களுக்குக் கட்டுப்பாடோ, எல்லைகளோ எதுவுமே இருந்திருக்கவில்லை. தனது தாயார் தனது காதலருடன் உறவு கொள்வதையும் இவன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

'இந்த சிறுவன் செய்த செயல் மிகவும் தீவிரமானது. ஆனால் இவனை சிறையில் அடைப்பதை விட நல்ல மனிதனாக மாற்றுவதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.

எனவே இவனுக்கு சிறைத் தண்டனை விதிக்கவில்லை. மாறாக சீர்திருத்தம் செய்து இவனை நல்வழியில் திருப்ப உத்தரவிடுகிறேன்' என்று நீதிபதி மேலும் கூறியுள்ளார்.

தற்போது இந்த சிறுவன், சிறப்பு சீர்திருத்த இல்லமொன்றில்; சேர்க்கப்பட்டுள்ளான்.

  Comments - 0

  • PREM Wednesday, 04 December 2013 04:48 AM

    நல்ல முடிவு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X