2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உலகிலேயே மிகவும் அபாயகரமான மலசலக்கூடம்

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகிலேயே மிகவும் அபாயகரமான மலசலக்கூடமாக  சைபீரியாவில் உள்ள மலசலக்கூடம் கருதப்படுகின்றது.

இம்மலசலக்கூடமானது கடல் மட்டத்திலிருந்து 6000 மீட்டர் உயரத்தில் மலை உச்சியின் நுனி பகுதியில் தொக்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சைபீரியாவின் அல்டாய் மலைச் சிகரத்தில் உள்ள ஒரு மலை உச்சியிலே இந்த மலசலக்கூடம்  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மலை உச்சியில் ஒரு வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பணியாற்றுகிறவர்களுக்காக இம்மலசலக்கூடத்தினை நிர்மாணித்துள்ளனர்.

இந்த வானிலை மையத்திற்கு மாதம் ஒருமுறை யாராவது வருவார்களாம். வந்து அங்கு சேர்ந்திருக்கும்  வானிலை குறித்த புள்ளிவிவரங்களை எடுத்துச் செல்வார்களாம். அப்படி வருபவர்களின் வசதிக்காகவே இந்த மலசலக்கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மலசலக்கூடமானது மலை உச்சியில் கிட்டத்தட்ட நுனிப்பகுதியில் தொக்கி நிற்பது போல இருப்பதால்தான் உலகிலேயே அபாயகரமான கழிப்பறை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இக்கழிப்பறையானது 1939ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.. அன்று முதல் இன்று வரை இம்மலசலக்கூடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .