2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மனைவியை கொன்று உடற்பாகங்களை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்த நபர்

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மனைவியை கொன்று உடற்பாகங்களை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்த நபரை மும்பை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் மும்பாயில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் தனது மனைவியை கொன்றுள்ளதுடன் அவரது உடலை நான்கு துண்டுகளாக வெட்டி அதில் மூன்று பாகங்களை குளிர்சாதன பெட்டிக்குள்ளும் ஒரு பாகத்தை தனது படுக்கையறையிலும் வைத்துள்ளார்.

கிரிஸ் கோட் (வயது – 35) என்பவரே தனது மனைவியான மதுபான்டி (வயது 32) என்பவரை இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
 
மேற்படி இருவருக்கும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இவர்கள் மும்பாயில் நகஷ்ரா வீட்டுத்தொகுதியில் கடந்த ஏழு மாதங்களாக வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

கிரிஷின் மனைவி மதுபாண்டி பிரான்ஸ் நாட்டுக்குரிய கடவைச் சீட்டை வைத்திருந்துள்ளார்.

இத்தகைய சம்பம் இடம்பெற்றமை தொடர்பில் செவ்வாய்க்கிழமை இரவே அறிந்துகொண்டதாக கிரிஷின் சகோதரன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேற்படி இருவரும் அடிக்கடி சண்டையிட்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிரிஷை பொலிஸார் கைதுசெய்துள்ளடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .