2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆணொருவரின் உதட்டைக் கடித்து இரண்டு துண்டாக்கிய பெண்

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் நபரொருவரின் உதட்டைக் கடித்து இரண்டுத் துண்டாக்கிய காட்சிகள் அடங்கிய வீடியோவானது இணையத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் இடம்பெறும் வருடாந்த பியர் திருவிழாவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடியோவில், பெண்ணொருவர் ஆணொருவரின் உதட்டை கடிப்பது போன்றும் அவரிடமிருந்து ஆண் தன்னை விடுவித்துகொள்ள போராடுவதும் பின்னர் அருகிலிருந்த ஏனையவர்கள் அப்பெண்ணை இழுத்து எடுப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இவ்வீடியோவை இதுவரை சுமார் 40,000 இற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .