2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவனுடன் பாலியல் உறவு: ஆசிரியை இடைநிறுத்தம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவரொருவருடன் அரை நிர்வாண கோலத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியொருவர் இரண்டு வருட இடைநிறுத்தத்தின் பின்னர் ஆசிரியர் பணியில் ஈடுபடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

எப்பி ஸ்பரங் டோவ்ஸன் என்ற 27 வயதுடைய ஆசிரியரொருவர் 17 வயது மாணவனான மெத்திவ் ரொபின்ஸன் என்ற மாணவருடன் அரை நிர்வாணக் கோலத்தில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

மேற்படி இருவரும் காரொன்றில் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் சேவைக்கு இவர் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.

மேலும், பாலியல் குற்றவாளிகளின் கீழ் மேற்படி ஆசிரியரின் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு அவர்   தனது ஆசிரியர் பணியிலிருந்து இடைநிறத்தப்பட்டார். இதேவேளை, அவரால் இரண்டு ஆண்டுகளின் பின்னர் இப்பணிக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், 'இவர் மீண்டும் இரண்டு வருடங்களின் பின்னர் ஆசிரியர் தொழிலிலுக்கு அனுமதிக்கப்படுவாராயின் அவர் தொடர்ந்தும் இத்தகைய பிழைகளை செய்துகொண்டே இருப்பார்' என இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் செரி ரொபின்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மீண்டும் ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • niyas Thursday, 19 December 2013 04:08 PM

    இவரும் ஆசிரியரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .