2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அந்தரங்கத்தை தீண்டிய பாம்பு: அவஸ்த்தைப்பட்ட நபர்

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவரின் ஆணுருபை பாம்பு தீண்டியதால் அந்நபர் பெரும் அவஸ்த்தைக்குள்ளான சம்பவமொன்று கானா, அசாந்தி பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

க்வெபேனா, நிக்ருமா என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு பாம்பு தீண்டுதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர், மேற்படி பிராந்தியத்தில் உள்ள பொது மலசலக்கூடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, அம்மலசலக்கூடத்திலுள்ள கழிவிருக்கையில் (கொமட்) கறும்பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இதனை அவதானிக்காது அந்நபர் கழிவிருக்கையில் அமர்ந்தபோது குறித்த பாம்பு அவரது ஆணுருபை தீண்டியுள்ளது.

வலியினால் துடித்த நபர் பாம்பு, பாம்பு என கத்தியுள்ளதுடன் மயங்கியும் விழுந்துள்ளார்.

இதனைத்  தொடர்ந்து மேற்படி நபர், ஏனைய கழிவறைகளில் இருந்த நபர்களில் உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .