2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காதலிக்காக வீடியோ கேம் தயாரித்த இளைஞர்

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


காதலியிடம் தனது நீண்டகால காதலை தெரிவிப்பதற்காக இளைஞர் ஒருவர் புதிய வீடியோ கேம் ஒன்றை தயாரித்துள்ளார்.  இளைஞரின் இத்தகைய காதல் பரிசை பார்த்த அப்பெண், அவ் இளைஞனின் காதலை ஏற்றுகொண்டுள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகானைச் சேர்ந்த ரொபர்ட் ஃபிங்க் என்ற இளைஞரே இவ்வாறு காதலிக்காக வீடியோ கேம் ஒன்றை தயாரித்துள்ளார்.

'நைட் மேன், எ கெஸ்ட் போர் லவ்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த வீடியோகேமில் பல சாகசங்களைச் செய்து கதாநாயகன் இளவரசியைக் காப்பாற்றுகிறான்.

இறுதியில், தனது காதலை ஏற்றுக் கொள்கிறாயா? கதாநாயகன் இளவரசியிடம் கேட்டுள்ளார்;. அப்போது திரையில் ஆம், இல்லை என இரண்டு பொத்தான்கள் ஒளிருகிறது.

இந்த வீடியோகேமை பார்;த்து நெகிழ்ந்து போன அவரது காதலி ஏஞ்சல் ஒயிட், ஆம் என்ற பொத்தானை அழுத்தி அவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

நண்பர்களின்; உதவியோடு ஃபிங்க் தயாரித்த இந்த வீடியோகேமில் வரும் இளவரசியின் பெயர் ஏஞ்சல் ஒயிட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோகேமைத் தயாரிக்க ஃபிங்கிற்கு கிட்டத்தட்ட 5 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது.

வீடியோ இணைப்பு


  Comments - 0

  • ravi Monday, 17 February 2014 02:05 PM

    love is great

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .