2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கழிவறை கடதாசி மட்டையிலும் கலை வண்ணம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


கழிவறை கடதாசி பயன்படுத்தி முடிந்ததும் அதனது மட்டையை தூர வீசி விடுவதே வழமையான செயற்பாடாகும். ஆனாலும் அதனையும் பிரயோசனமாக பயன்படுத்தலாம் என கலை நிபுணர் ஒருவர் நிரூபித்துள்ளார்.

ஓவியரான அனஸ்டாசியா என்பவரே தூக்கி வீசப்படும்; கழிவு பொருளைக் கொண்டு இத்தகைய கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
கடந்த 2009 ஆண்டிலிருந்து 2012 ஆண்டுவரை இந்த செயற்திட்டத்தை அவர் முன்னெடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கழிவறைக்கு பயன்படுத்தப்படும் கடதாசி மட்டையினுள் உருவாக்கப்பட்ட ஓவியங்களை அவர் படம்பிடித்து நூல் வடிவமாக்கியுள்ளார்.
இவர் 67 உருவங்களை கழிவறை கடதாசி மட்டையில் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .