2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நின்றுகொண்டே கற்கும் வகுப்பறை அறிமுகம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு நின்றுகொண்டே படிப்பதற்கான வகப்பறை ஒன்று அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் உடற் பருமன் உள்ளிட்ட விடயங்களால் மாணவர்கள் தினம் அல்லல் படுபவர்களாக உள்ளனர். இந்நிலையில் இவற்றிலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்காக இத்தகைய ஒரு முறையை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இதயம் மற்றும் நீரிழிவு நோய் ஆய்வு மைய வல்லுநர்கள், மாணவர்களின் உயரத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய வகையில் மேற்படி மேசையை  வடிவமைத்துள்ளனர்.

மாணவர்கள், தமது தேவைக்கேற்ப நின்று கொண்டோ அல்லது அமர்ந்தபடியோ கற்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இந்த சிறப்பு மேசையானது மான்ட் ஆல்பர்ட் ஆரம்பப்;பள்ளியின் 6ஆம் வகுப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேசை அமைக்கப்பட்டதிலிருந்து நிறைய மாணவர்கள் நின்று கொண்டே பாடம் கற்கின்றனர்.

மாணவர்கள் இவ்வாறு நின்றபடி கல்வி கற்பதால் அவர்களது சுகாதாரம், உடல்தகுதி, படிப்பாற்றல், நினைவுத்திறன் மேம்படுகிறதா என்பதை கணக்கிட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு முந்தைய ஆய்வுகள் மூலம், பள்ளிக்கூடங்களில் தினமும் 3இல் 2 பங்கு காலம் அமர்ந்தபடியே இருந்தால் நீரிழிவு நோய், இதய நோய், உடல் ஊதி பருமனாதல் போன்ற பிரச்சினைகள் வருகிறன்றன என்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய திட்டத்துக்கு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக மான்ட் ஆல்பர்ட் ஆரம்பள்ளியின் முதல்வர் ஷரோன் சேட்லிக் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .