2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விவாகரத்துக்கு காரணமான முள்ளுக்கரண்டி

Kogilavani   / 2014 ஜனவரி 03 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கணவர் முள்ளுக்கரண்டியை பாவித்து பட்டாணி உண்பதில்லை என்று கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார்.

குவைத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார்.

திருமணம் முடித்து ஒரு கிழமையிலே இவ்வாறு மேற்படி பெண் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'தனது கணவர் பட்டாணி உண்ணும்போது முள்ளுக்கரண்டியை பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாண் உண்ணும்போது முள்ளுக்கரண்டிக்கு பதிலாக வேறு உபகரணங்களை பயன்படுத்துகிறார்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது.

இதேபோல் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பற்பசையை எடுக்கும்போது அதனை முடிவிலிருந்து எடுக்காமல் நடுவிலிருந்து எடுக்குமாறு கூறி தன்னை தனது கணவர் வலியுறுத்துவதாக கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார்.

'எங்கள் இருவருக்குமிடையில் எப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டுகொண்டே இருக்கும். பற்பசையை இறுதிப் பகுதியிலிருந்து எடுக்குமாறு அவருக்கு நான் கூறுவேன். ஆனால், அவர் அதனை கருத்தில் கொள்வதில்லை. அவர் மிகவும் பிடிவாதமானவர்' என அப் பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • rukshan Saturday, 04 January 2014 01:58 AM

    World best stupid. Awesome

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .