2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஷொப்பிங்மால்களில் கணவர்களுக்கான ஓய்வறை

Kogilavani   / 2014 ஜனவரி 07 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


மனைவியுடன் ஷொப்பிங் செய்வது என்றாலே கணவருக்கு பொதுவாக பிடிப்பதில்லை. ஏனெனில், ஷொப்பிங் செய்ய செல்லும் பெண்கள் ஒரு நாளை அதற்கென செலவிடுவார்கள். இதனால், மனைவியுடன் ஷொப்பிங் செய்வது என்றாலே கணவருக்கு அலர்ஜியாகத்தான் இருக்கும்.

எப்படியாவது அதிலிருந்து தப்பி செல்லவே யோசிப்பர். ஆனால், இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் விதமாக கணவர்களுக்கான
ஓய்வறையை சீனா அறிமுகப்படுத்திவிட்டது.

மனைவியுடன் ஷொப்பிங் செய்ய செல்லும் கணவர், ஓய்வெடுப்பதற்காக கணவர்களுக்கான ஓய்வறை என்ற பெயரில் ஓய்வறைகள் சீனாவின் ஷொப்பிங்மால்களில் புதிததாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறைகளில், விசேட இருக்கைகள், குட்டி தூக்கத்திற்கான வசதிகள், மதுபானசாலைகள், வைபை வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஷொப்பிங் செய்யச் சென்ற தனது மனைவி குறித்த கட்டிடத்தில் எந்த இடத்தில் இருக்கின்றார் என்பதை அறிந்துகொள்வதற்கான வசதிகளும் இங்கு காணப்படுகின்றன.

சீனாவின் சென்சென் மாகாணத்தில் முதன் முதலாக கடந்த 2010 ஆம் ஆண்டு கணவர்களுக்கான ஓய்வறை என்ற பெயரில் இவ்வாறான அறைகள் வடிவமைக்கப்பட்டது. தற்போது அவை நாட்டின் பல பாகங்களிலும் உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X