2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இரண்டு வயது குழந்தையை இரண்டாம் மாடியிலிருந்து தூக்கியெறிந்த தந்தை

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தையொருவர் தனது இரண்டு வயது ஆண் குழந்தையை ஹோட்டலொன்றின இரண்டாம் மாடியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு பின்னர் தானும் குதித்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஜோன் பப்லோ மாரிஜோ என்ற 41 வயது நபரே இவ்வாறு தனது குழந்தையை பல்கனி வழியாக தூக்கியெறிந்துள்ளார்.

இவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் செயற்பட்டுவரும் குழந்தைகள் மற்றும் குடும்ப நல செய்திகளை வெளியிடும் திணைக்களமானது அறிவித்துள்ளது.

இவ்வாறு தூக்கியெறிப்பட்ட குழந்தை கடுங்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஆனாலும் அக்குழந்தை உடல்நலம் தேறிவிடலாமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி நபரும் கடுங்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமைகள் தொடர்பில் இதுவரை தெறியவரவில்லை என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

குழந்தையொன்றும் நபரொருவரும் நிலத்தில் வீழ்ந்து கிடப்பதை கண்டு நான் அவசர தொலைபேசி இலக்கமான 911 என்ற இலக்கித்திற்கு தொடர்புகொண்டு அறிவித்தேன். அவர்கள் இருவரும் மயக்கநிலையில் இருந்தனர். என நபரொருவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பக்கட்டநிலையிலே இருப்பதாகவும் குழந்தை மற்றும் மேற்படி நபர் ஓரளவு குணமடைந்த பின்னரே விசாரணைகளின் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல முடியுமென்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .