2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பிறக்க போகும் குழந்தையை பேஸ்புக்கில் விலைபேசிய தாய்

Kogilavani   / 2014 ஜனவரி 21 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறக்க போகும் தனது குழந்தையை இளம் கர்ப்பிணி ஒருவர் 68 ஸ்ரேலிங்பவுனுக்கு விற்பனை செய்வதாக முகத்தளத்தில் விளம்பரம் செய்த சமப்வமொன்று சிலி நாட்டில் இடம்பெற்றுள்ளது.

வெரோனிகா கரார சபாரோ என்ற 18 வயது பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளார்.

இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் சகோதரியையும் சிலி நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துகொண்ட அப்பெண் அது குறித்து தனது காதலுனுக்கு அறிவித்துள்ளதுடன் அது தொடர்பில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாமென்று கூறியுள்ளார்.

ஆனால், அப்பெண்ணின் காதலன் அந்த இரகசியத்தை அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவித்துவிட்டார்.

இதனையடுத்து கருவை கலைத்துவிடும்படி அப்பெண்ணுக்கு தாய் அறிவுறுத்தியுள்ளார். இல்லாவிட்டால் பிறக்கும் குழந்தையை தத்துகொடுத்துவிடும்படியும் அல்லது விற்றுவிடும்படியும் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து குறித்த பெண் தனது குழந்தையை விற்கப்போவதாக முக புத்தகத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

இக்குழந்தையை வாங்குவதற்காக பலர் முன்வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சன்டிகோ நகர பக்கத்தில் உள்ள தம்பதியொன்று அக்குழந்தையை பெற்றுகொள்வதற்கான முன்நடவடிக்கையாக 1,135 ஸ்ரேலிங் பவுன்களை பதிவுக்கட்டணமாக செலுத்துவதற்கு முன்வந்து.

இந்நிலையில் அப்பெண்ணுக்கு நவம்பர் மாதம் குழந்தை பிறந்தவுடன் அந்த தம்பதியர் குறித்த குழந்தையை வாங்குவதற்காக பணத்தை செலுத்தியுள்ளனர்.

குழந்தையின் பிறப்பை பதிவுசெய்வதற்காக சென்றபோது அதை தெறிந்துகொண்ட பொலிஸார் குழந்தையின் தாய் மற்றும் அவரது தாய், சகோதரியை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • ruthra Tuesday, 21 January 2014 12:30 PM

    பெற்ற குழந்தையை தூக்கியெறியும் பெண்களுக்கு மத்தியில் இப்பெண் சிறந்தவர் என்றே கூறவேண்டும்

    Reply : 0       0

    thaksha Wednesday, 22 January 2014 05:27 AM

    காதலனையும் கைது செய்ய வேண்டும். இத்தனைக்கும் அவனும் ஒரு காரணம். இதேவேளை, குறித்த பெண் எவ்வளவோ பரவாயில்லை. காதல், கர்ப்பம், குழந்தையை தூக்கியெறிதல் அல்லது கொலை செய்தல் என இந்த உலகில் பல கொடூரங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தன் குழந்தை எங்கேயோ சந்தோஷமாக வளரட்டும் என்று தத்துக்கொடுக்க முன்வந்துள்ளாரே... அவரை ஒருவகையில் பாராட்டத்தான் வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X