2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

செக்ஸ் லொத்தரின் ஜாக்பொட் பரிசு: உல்லாச ஹோட்டலில் அறை

Kogilavani   / 2014 ஜனவரி 22 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்பின் அறிமுகம் இல்லாத புதியவருடன் உறவு கொள்ள விரும்புபவர்களுக்கு ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்து கொடுக்கும் புதிய வாய்ப்பொன்றை இங்கிலாந்தில் இயங்கிவரும் இணையத்தளம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 5 வருடங்களாக செயற்பட்டு வரும் பிரபல டேட்டிங் இணைய தளமான பார்கெட் டின்னர், 'செக்ஸ் லொத்தர்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த லொத்தரில் வெற்றி பெறுபவர்களுக்கு இங்கிலாந்தின் பிரபல ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை ஒதுக்கி, அவர்கள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பளிப்பதாக அந்த இணையத் தளம் அறிவித்துள்ளது.

தற்போது இந்த இணைய தளத்தில், 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த இணையதளம் செக்ஸ் லொத்தரை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, முன்பின் அறிமுகம் இல்லாத புதியவருடன் உறவு கொள்ள விரும்புபவர்கள் இந்த குலுக்கலில் பங்கு பெறலாமாம். அதனைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் ஒரு பெண், ஒரு ஆண் தேர்வு செய்யப்படுவார்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஜாக்பாட் பரிசாக, இங்கிலாந்தின் பிரிக்டன் நகரில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் சகல வசதிகளுடன் கூடிய அறை ஒன்று ஒதுக்கித் தரப்படும். அதற்கான செலவை இணைய தளமே ஏற்றுக் கொள்ளும்.

இந்த செக்ஸ் லொத்தருக்கான பதிவை  இணைய தளம் இலவசமாக வழங்குவதால் ஏராளமான இளைஞர், இளம்பெண்கள் போட்டி போட்டு பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 11 ஆயிரம் இதற்கு பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'அறிவிக்கப்பட்டுள்ள இந்த லொத்தருக்கு கிடைத்த வரவேற்பு எங்களை அதிர்ச்சியடை செய்துள்ளது. இதுவரை 11 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் ஏராளமானோர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்' இணையத்தளத்தின் நிறுவுனர் ஹோவர்ட் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X