2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஒன்றாக போவோமா...?

Kogilavani   / 2014 ஜனவரி 23 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒரே மலசலக்கூடத்தில் இரண்டு கழிவிருக்கைகளை மறைப்பின்றி அருகருகில் வைத்து ரஷ்யாவில் மலசலக்கூடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரஷ்யாவின் சோச்சி நகரில் எதிர்வரும் மாதம் குளிர்கால ஒலிம்பிக் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்தங்களாக பல்வேறு செயற்பாடுகளை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. இதன்  ஒரு ஏற்பாடாகவே இந்த கழிவிருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பிபிசியைச் சேர்ந்த செய்தியாளர் ஸ்டீவ் ரோசன்பெர்க் இந்த மையத்துக்குப் இதனை படம்பிடித்து தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அதனை பலர் பார்வையிட்டு தமது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான மலசலக்கூடங்கள்; ரஷ்யாவில் புதிதில்லை. அங்குள்ள கால்பந்து மைதானங்களில் இவ்வாறான மலசலக்கூடங்கள்தான் நிர்மாணிக்கப்படும் என ரஷ்யாவைச் சேர்ந்த ஆர் ஸ்போர்ட் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் வசிலி கோனோவ் விளக்கியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .