2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கைக்கு வந்ததை காலால் எட்டி உதைத்த குடி மகள்

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

லொத்தர் பரிசாக கிடைத்த 3 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 772 ரூபா பணத்தை பெண்ணொருவர் குடிபோதையில் கிழித்து அதனை மலசலக்கூட கழிவிருக்கையில் பிளஸ் செய்த சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜெர்மன் எஸ்ஸன் நகரைச் சேர்ந்த ஏஞ்சலா மெய்யர்(63) என்ற பெண்ணே இத்தகைய விபரீதத்தை செய்துள்ளார்.  

இப்பெண்ணுக்கு ஜெர்மன் தேசிய லொத்தரில்; ரூ. 3 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 772 பரிசு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அவரது கணவர் இறந்த பராமரிப்பு இல்லத்தில் இருந்து ஏஞ்சலாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவரின் கணவரின் மருத்துவ செலவுக்கான தொகையை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை பிரித்துப் படித்த ஏஞ்சலா ஆத்திரம் அடைந்தார். தனக்கு பரிசாக கிடைத்த பணத்தை யாருக்கும் கொடுக்க விரும்பாத அவர்
மதுபானத்தை அருந்தியுள்ளார்.   இதையடுத்து   குடிபோதையில் பரிசுத் தொகையை கிழித்து கழிவிருக்கையில் பிளஷ் செய்துள்ளார்.
இச்சம்பவமானது பலரை வியப்படைய செய்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X