2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முத்தத்தால் சிக்கிய திருடன்

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகைக்கடையொன்றில் திருடிய திருடர்களில் ஒருவர்; அங்கிருந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததால் பொலிஸில் மாட்டிய சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20 வயது இளைஞன் ஒருவனே இவ்வாறு பொலிஸில் மாட்டிகொண்டுள்ளார்.
திருடர்கள் இருவர் மேற்படி நகைக்டையில் திருடுவதற்கு திட்டமிட்டதுடன் அதனை அக்கடையில் தொழில்புரியும் 50 வயது பெண்ணூக்கூடாக செயற்படுத்த முயன்றனர்.

ஒருநாள் மேற்படி பெண் வேலை முடித்து தனது குடியிருப்புக்கு திரும்பிகொண்டிருந்தார். அப்பெண்ணை பின்தொடர்ந்த திருடர்கள் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்தனர்.

அதேவேகத்தில் அவரது தலையில் ஏதோ ஒன்றை ஊற்றி விட்டு ஒரு நாற்காலியில் அவரை கட்டி போட்டனர்.  பின்னர் அந்த பெண்ணிடம், 'நாங்கள் நகை கடையில் திருடுவதற்கு உதவ வேண்டும். இல்லையென்றால் உனது தலையில் ஊற்றியுள்ள பெற்றோலில் உடனடியாக தீ மூட்டிவிடுவோம்' என அச்சுறுத்தியுள்ளனர்.

அந்த பெண்ணும் பயந்து போய் திருடுவதற்கு ஒப்பு கொண்டாள். இரு திருடர்களும் பெண்ணுடன் கடைக்கு சென்றனர்.

அந்த பெண்ணின் உதவியுடன் கடையின் உள்ளே புகுந்த அவர்களில் ஒருவன் கடையில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தான்.  மற்றொருவன் பெண்ணின் பக்கத்தில் பாதுகாப்பிற்காக நின்று கொண்டான். அதன் பின்பு பெண்ணை விடுவிப்பதற்கு முன்பாக அவன் அப்பெண்ணின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு தப்பிச்சென்றான்.

திருடர்களின் செயற்பாட்டை உடனடியாக, கடையின் உரிமையாளர் பொலிஸாருக்கு தெரிவித்துவிட்டார். பொலிஸார் பெண்ணின் கன்னத்தில் இருந்து திருடனின் மரபணுவை தனியாக பிரித்து எடுத்து அதனை தேசிய மரபணு பதிவு மையத்தில் பதிவு செய்துகொண்டனர்.  அதன் பின்பு அந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு  பொலிஸார் திருடனை தேடி வந்தனர்.

இந்நிலையில், பிரான்சின் தெற்கு பகுதியில், மற்றொரு வழக்கில் ஒருவனை பொலிஸார் கைது செய்திருந்தனர்.  அவனது மரபணு நகை கடை கொள்ளையனின் மரபணுவுடன் ஒத்துபோனதால் எளிதில் அவனை கைதுசெய்தனர். 

குற்றத்தை ஒப்பு கொண்ட அவன், பெண்ணின் மீது ஏற்பட்ட பிரியத்தால் முத்தமிட்டதாக தெரிவித்தான்.  பின்னர் பொலிஸார் அவனை காவலில் வைத்தனர். அவனை கொண்டு அவனது நண்பனை தேடும் முயற்சியில் பொலிஸார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X