2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அடர்ந்த உரோமங்களால் அவதிப்படும் பெண்

Kogilavani   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் வளர்ந்து வரும் அடர்ந்த உரோமங்களால்  பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகிறார்.

இங்கிலாந்து நாட்டின் பெர்க்ஷையர் என்ற நகரில் வாழும் கர்னாம் கவுர் என்ற 23 வயது பெண்ணே  பொலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு 11 வயது  இருக்கும்போது இவரது உடலில் உரோமங்கள் வளர ஆரம்பித்துள்ளன. இதனால் இவர் தனது சக பள்ளி மாணவர்களின கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார்.  இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார்.

இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் உரோமங்கள் வளர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளானார். வாரத்தில் இரண்டு தடவைகள் சவரம் செய்து வந்த போதும் உரோமங்கள் வளர்வது தடைப்படவில்லை. அதனால் சவரம் செய்வதையே நிறுத்தவிட்டார்.

'கடவுள் நமக்கு அளித்த வரம் இது. இதை எதற்காக எதிர்த்து போராட வேண்டும் என முடிவு செய்து சீக்கியர்கள் போல உரோமங்களை  வளர்க்க தொடங்கிவிட்டேன்' என அப் பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இவருக்கு பெரிய தாடி, மீசை ஆகியவை உள்ளன. இவருடைய பெற்றோர்களும், சகோதரரும் இவருடைய முடிவிற்கு ஆதரவு அளித்தனர்.

ஆனால் இவருக்கு இதுவரை ஆண் தோழர் கிடைக்கவில்லை என்பதுதான் இவருடைய ஒரே ஏக்கமாக இருந்து வருகிறது.

சக பெண்களை போலவே தனக்கு செக்ஸ் ஆசை இருப்பதாகவும், ஆனால் என்னை பார்க்கும் ஆண்கள் எல்லோரும் என்னை விட்டு ஒதுங்கியே போகிறார்கள் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.  





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X